தீபாவளியின் சிறப்புகள்

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள்.
2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள்.
3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம்.
5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான ‘கல்சா’வை அமைத்த தினம்.
6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள்.
7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள்.
8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
9. மாவலிபூஜை செய்யும் நாள்.
10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள்.
11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்)
12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய ‘அயினி அக்பர்’ என்ற நூல் கூறுகிறது

Leave a Reply

Your email address will not be published.