தீபாவளி எஃபெக்ட்: 4 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை!

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையைவிட 34.5 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளிக்காக கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.கடந்த சனிக்கிழமை 124 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும், திங்கள்கிழமையன்று 148 கோடி ரூபாய்க்கும், செவ்வாய்க்கிழமை 180 கோடி ரூபாய்க்கும் டாஸ்மாக் மது விற்பனையாகியுள்ளது. ஆகமொத்தம் இந்த 4 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

இதில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் ஆகிய 2 நாட்களில் மட்டும் 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் 244 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 2 நாட்களில் 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டை விட 34.5 சதவீதம் கூடுதலாகும்.

Also watch