தீபாவளி தினத்தன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தீபாவளி தினத்தன்று வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வரும் 6-ம் தேதி தீபாவளி தினத்தன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும், இது வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது குறித்து உடனடியாக கணிக்க இயலாது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.எனினும் வலுப்பெறும் பட்சத்தில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிககனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

Also see…