தெலங்கானா தேர்தல்: தரை ரேஞ்சுக்கு கீழிறங்கிய வேட்பாளர்கள்

தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தெலங்கானாவில் வாக்காளர்களைக் கவர, சாலையோரத்தில் அமர்ந்து தோசை சுடுவது முதல்  குளிப்பாட்டுவது வரை பல்வேறு உத்திகளை வேட்பாளர்கள் கையாள்வது வேடிக்கையாக உள்ளது.

தேர்தலில் மக்களிடம் மன்றாடி வென்றுவிடும் அரசியல்வாதிகளில் பலர், அமைதிப்படை அமாவாசையாக மாறி, தொகுதியை மறந்துவிடுவது வாடிக்கை. அவ்வாறு தொகுதியை மறந்தவர்களோ அல்லது அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களோ, தெலங்கானாவில் ஓட்டு கேட்டு வரும்போது காதில் ரத்தம் வழியும் அளவுக்கு வாக்காளர்கள் திட்டி விரட்டுகின்றனர். அதைக் கூட அசடு வழிந்து, சிரித்தபடியே சில அரசியல்வாதிகள் கடந்து செல்கின்றனர். குழந்தையை கொஞ்சும் வேட்பாளர்

ஆந்திரா என்றாலே, காரம் தான் முதலில் நினைவுக்கு வரும், அதுவும் தெலங்கானாவில் காரம் கொஞ்சம் தூக்கல்தான். வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் நடந்த இந்த காரசார மோதல்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. தேர்தலில் வெற்றி பெற்றதுமே, மாப்பிள்ளை போல் முறுக்கிக் கொண்டு திரியும் அரசியல்வாதிகள் மீண்டும் தேர்தல் என்று வந்துவிட்டால் கூச்சம் பார்க்காமல் தரை ரேஞ்சுக்கு இறங்கிவிடுவார்கள். எப்படியாவது எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கனவில் ரோட்டோரக் கடைகளில் தோசை சுடவும் அரசியல்வாதிகளில் பலர் தயங்குவதில்லை.

தெலங்கானாவில் கார சேவ் செய்யும் தேர்தல் வேட்பாளர்

மற்றொரு வேட்பாளரோ, தோசையென்ன தோசை, என்னால் காராசேவு கூட செய்யமுடியும் என சமையல் மாஸ்டர் அவதாரம் எடுத்த ருசிகர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சும் வழக்கமான ஒன்றுதான். தெலங்கானாவில் ஒரு வேட்பாளர் குழந்தையை, தூக்கிக் கொண்டிருக்கையில் சாலையோரத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரைப் பார்த்ததும் அவரை குளிப்பாட்டத் தொடங்கிவிட்டார்.

Loading…

இதுபோல், முடிவெட்டுவது. மொட்டையடிப்பது என தெலங்கானாவில் காரம் குறையாமலும், ருசிகர சம்பவங்களுக்குப் பஞ்சமில்லாமலும், வாக்காளர்களிடம் காலில் விழாத குறையாக வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

Also see…