தேர்தலில் ஆதரவு யாருக்கு…? மு.க.அழகிரி பதில்

மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதிலளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன் என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை. அவர் என்னைச் சந்தித்து ஆதரவு கேட்டால், பின்னர் முடிவெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக – திமுக எங்கெங்கு நேரடியாக போட்டியிடுகிறது? – வீடியோ