தேர்தலில் வென்றால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி உறுதி

‘2019 மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காங்கிரஸ் அரசு பதவியேற்ற இரண்டே நாளில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இன்று பிரமாண்ட விவசாயிகள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி ஜெய்ப்பூர் வந்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ராஜஸ்தான் மற்றும் அனைத்து மாநில விவசாயிகளும் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களின் பிரச்சாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்த 2 நாட்களிளேயே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோம். இதேபோல் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

When we form the govt in centre in 2019, we will waive farm loans across the country. This is a first step to provide relief to the farmers but this is not the final solution: Congress President @RahulGandhi #CongressKisanKeSaath pic.twitter.com/P1RezOyA6r
— Congress (@INCIndia) January 9, 2019Loading…

மேலும் விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் வேதனையை குறைக்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது முதற்கட்ட தீர்வு தான், இது நிரந்தரத் தீர்வு கிடையாது. கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி விவசாயிகளையும், இளைஞர்களையும் நிராகரித்துள்ளார். பிரதமர் மோடியை பார்த்து நாட்டின் இளைஞர்கள் சோர்வடைந்துள்ளனர், என்றும் பேசினார்.

மேலும் இந்திய நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் எத்தனை இளைஞர்கள் மோடியால் பண உதவி பெற்று பயனடைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்

Youth of the country are tired of Mr. Modi. With Demonetisation he wrecked small businesses. He waived off loans of India’s richest, but how many young entrepreneurs received financial support from Modi govt?: Congress President @RahulGandhi #CongressKisanKeSaath pic.twitter.com/EZCei2sZqa
— Congress (@INCIndia) January 9, 2019

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசிய போது, மாநில அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாது என்றும் வரும் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.