தொலைக்காட்சி தொடரில் மாமியாராக நடிக்கும் கமலின் முன்னாள் கதாநாயகி

0
1980-களில் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயப்பிரதா தற்போது இந்தியில் தயாராகும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் நினைத்தாலே இனிக்கும் படம் மூலம் அறிமுகமான ஜெயப்பிரதா, கமல் ஹாசனுடன் மன்மத லீலை, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கில் கமல் மற்றும் ஜெயப்பிரதா இணைந்து நடித்த ‘சாஹார சங்கமம்’ திரைப்படம் தமிழில் ’சலங்கை ஒலி’ என்ற பெயரில் வெளியாகி இங்கேயும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

தொலைக்காட்சி தொடரில் கால்பதிக்கிறார் ஜெயப்பிரதா


தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும், ஜெயப்பிரதா ஒரு தமிழ் நடிகையாகவே இந்தியில் அடையாளம் காணப்பட்டார். பாலிவுட் சினிமாவில் கிடைத்த புகழ் மூலம் உ.பி-யின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியில் தயாராகும் ‘பெர்ஃப்கட் பதி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஜெயப்பிரதா ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு பெண்களை மையப்படுத்திய இந்த தொடரில் ஜெயப்பிரதா முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியாராக நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, தொலைக்காட்சி தொடர்கள் சினிமாக்களை விட மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன. முற்போக்கு சிந்தனை கொண்ட மாமியார் கதாபாத்திரம் என்பதால் ‘பெர்ப்ஃப்கட் பதி’ தொடரில் நடிகக் உடனே சம்மதித்ததாக கூறினார்.

ஜெயப்பிரதா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் ‘கேணி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இந்தி மற்றும் தமிழில் படங்களை இயக்கும் திட்டங்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.