நடிகர் சொன்ன ஒரு வார்த்தை.. வெடித்த மிகப்பெரிய போராட்டம்

#Naseeruddin Shah

நடிகர்கள் ஏதாவது தவறாக பேசினால் அது மிகப்பெரிய சர்ச்சையாகும் என்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். அதுபோலவே தற்போது நசீருதீன் ஷா கூறியுள்ள கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் போராட்டக்காரர்களால் அடித்து கொல்லப்பட்டது பற்றி அவரை பேசியுள்ளார்.“போலீசாரின் உயிரை விட, பசுவிற்கு சிலர் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்” என அவர் கூறியிருந்தார். மேலும் ஒரு இந்தியனாக இதற்கு வருத்தப்படுகிறேன் என அவர் கூறியிருந்தார்.இவரது பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் அவருக்கு பாகிஸ்தான் செல்ல விமான டிக்கெட் எடுத்து அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளது UP நவநிர்மாண் சேவா அமைப்பு.அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் போரட்டத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.