நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்? – மனைவியின் புகாரால் பரபரப்பு

நண்பரை பார்க்க சென்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி ஜூலி காவல்துறையில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்நிலையில்,  பணப்பிரச்சனை காரணமாக நடிகர் பவர் ஸ்டார் ஊட்டியில் உள்ள தனது நிலத்தை விற்பதற்காக வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார். அவரை காணவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்தார்.இதற்கிடையே, நேற்று காலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பவர் ஸ்டார் பேசியுள்ளார். அதன்பின்பு அவரது மனைவி ஜூலி ஊட்டிக்கு சென்று கணவரை சந்திதுள்ளார்.

ஜூலி புகாரால் காவல்துறையினர் பவர் ஸ்டாருக்கு போன் செய்து எங்கு இருகிறார் என்றும் ஏன் வீட்டில் கூறாமல் சென்றீர்கள் என்றும்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு பவர் ஸ்டார் ” நான் காணமால் போகவில்லை” வீட்டில் சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவரது மனைவியிடம் காவலர்கள் பேசினர். அப்போது அவர் எனது கணவர் ”காணமால் போய்விட்டாரோ என்ற நினைப்பில் புகார் கொடுத்துவிட்டேன்” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

Also see… வீட்டுக்குள் புகுந்த 19 அடி நீள ராஜநாகம்