நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம்

நாளை மறுதினம் (நவம்பர் 9) அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குமரிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 9-ம் தேதி அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வர உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியது. சென்னையைப் பொருத்தவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி வரையும் பதிவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.

Also watch