நாளை மறுநாள் தேர்தல் – காங்கிரஸ் கட்சிக்கு தாவிய பாஜக வேட்பாளர்

கர்நாடகாவில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்க உள்ள ராம்நகரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்திரசேகர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவதாக இன்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. அம்மாநிலத்தை ஆளும் மஜத – காங்கிரஸ் கூட்டணி இந்த இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ராம்நகரா சட்டமன்ற தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார்.பாஜகவின் சார்பில் சந்திரசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சந்திரசேகருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி அக்கட்சிக்கு பாஜக அதிர்ச்சி அளித்திருந்தது. ஆனால், நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவதாக பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சந்திரசேகர்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குமாரசாமி (Image: PTI)

பாஜகவில் ஒற்றுமை இல்லை மற்றும் அக்கட்சியில் இருந்து எனக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சந்திரசேகர், எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்வதாக கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட குமாரசாமி, ராம்நகரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். கணவர் போட்டியிட்டு ராஜினாமா செய்த தொகுதியில் அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்..

Loading…

தெலங்கானா தேர்தல்: தரை ரேஞ்சுக்கு கீழிறங்கிய வேட்பாளர்கள்

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல்

Also See..