நிச்சயதார்த்தம் முடிந்த 5 நாளில் பெண் கொலை

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த ஐந்து நாட்களில் மணப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பள்ளி ஆசிரியராக பணிசெய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடத்துள்ளது. இந்நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் வேறொருவரைக் காதலித்தார் என்றும் அவரை விட்டுவிட்டு மற்றொருவரை திருமணம் செய்துகொள்ள் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அப்பெண்ணை கொலை செய்துள்ளார் எனத் சந்தேகிக்கப்பட்டது.

இதன் பேரில் இறந்த பெண்ணின் காதலன் என்று கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.