நீங்கள் இரவில் செய்யும் இந்த தவறுகள், உங்களின் உடல் எடையை இருமடங்காக கூட செய்கிறது..!

கால மாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், அதற்கேற்ப மோசமான மாற்றங்களை நமது அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க கூடாது. இன்று நாம் பின்பற்றி வருகின்ற பல பழக்க வழக்கங்களும் நமது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சிதைக்க கூடியதாக உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக இரவில் நாம் செய்கின்ற பல தவறுகள் நமது முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது. நாம் செய்கின்ற என்னென்ன தவறுகள் நமது உடல் எடையை இருமடங்காக மாற்றுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இனிமையான இரவு நேரங்கள்..! பலருக்கு பகலை காட்டிலும் இரவு நேரமே மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பகலில் இவர்களை போன்றவர்கள் அதிக நேரம் கண் முழிக்க விரும்புவதில்லை. மாறாக இரவு நேரத்தில் எல்லா வகையான வேலைகளையும் செய்ய விரும்புகின்றனர். ஆனால், இதில் ஒரு சில பழக்கங்கள் இவர்களின் உடல் உப்பி கொண்டே போவதற்கு காரணியாக உள்ளதாம். இந்த நேரத்தில் இது தேவையா..? நம்மில் பலருக்கு இந்த பழக்கம் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. அதாவது, இரவு தூங்க போகும் முன் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு கட்டாயம் உடல் பருமனாக மாற கூடும் என இன்றைய ஆய்வுகள் சொல்கிறது. எனவே, தூங்க போகும் முன் காபி குடிக்காதீர்கள். என்ன வண்ணம் உள்ளது..? பொதுவாக நாம் நமது வீடுகளில் வைத்துள்ள வண்ணங்கள் கூட நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அந்த வகையில் சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் உங்களது வீடுகளை அலங்காரம் செய்யாதீர்கள். ஏனெனில், இவை அதிக பசியை தூண்டி அதிகமாக சாப்பிடுவதால் குண்டாக மாறி விடுகின்றீர்கள். ஃபோனும் கையுமாக..! இன்று பலருக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த போன் அடிமைத்தனம். காலையில் எழும்போதும், இரவு தூங்கும் போதும் இதன் முகத்தில் தான் நாம் முழுகின்றோம். இதனால் ஏற்படுகின்ற ஆபத்துகளில் ஒன்றுதான் உடல் எடை கூடுதல். போன் பயன்படுத்துவதால் தூங்கும் நேரம் மாறுதல் அடையும். எனவே, விரைவிலே குண்டாகி விடுவீர்கள். MOST READ: இந்த உணவுகளை இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை உடனே குறைந்து விடுமாம்..! தொலைக்காட்சிக்கு முற்றுப்புள்ளி..! எப்படி போனில் ஆபத்துகள் இருக்கிறதோ, அதே போன்று தான் இந்த தொலைக்காட்சியிலும் பல வித ஆபத்துகள் உள்ளன. தொலைக்காட்சியை இரவில் அதிக நேரம் பார்த்தால் உடலின் செயல்பாடுகள் மாறுதல் பெறும். இவற்றின் விளைவாக உடல் எடை கூடி விடும். எவ்வளவு தூக்கம்..? நாம் செய்யும் வேலைகேற்ப நாம் ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமது உடல் விரைவிலே பலவீனம் பெற்று விடும். 7-8 மணி நேரம் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு பசியின்மை, சோர்வு, களைப்பு போன்றவை ஏற்படும். இதன் பின்விளைவாக உங்களுக்கு கிடைக்கும் பரிசு உடல் எடை தான். இவ்வளவு கொறித்தலா..? இந்த கொறிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நாம் என்னென்னமோ உணவுகளையெல்லாம் உண்கின்றோம். இது நமது ஆரோக்கியதை கெடுத்து, உடலை உப்பி கொண்டே போக செய்து விடும். இரவில் ஒயினா..? பலருக்கு இரவு நேரத்தில் ஒயின் குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இது பல வித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில் முக்கியமானது உடல் பருமன் கூடுதல். தூங்க போகும் முன் ஒயின் குடித்தால் உடல் எடை கூடி விடுமாம். MOST READ: அன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்..! உங்களது அலாரம் எப்படி..? அலாரம் வைக்கும் பழக்கம் நமக்கு இருந்தாலும், நாம் அதிக நேரம் கடந்தே எழுந்து கொள்வோம். குறிப்பாக இது போன்ற பழக்க வழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை முழுமையாக பதித்து விடும். அத்துடன் அதிக நேரம் உறங்கினால் உடல் எடை கூட தொடங்கும். எது அவசியம்..? ஆடம்பரமா..? அத்தியாவசியமா..? என்று கேட்டால் நம்மிடம் இப்போதெல்லாம் வரும் பதில் ஆடம்பரம் தான். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆடம்பரத்தை போக்கி விட்டு அத்தியாவசியமான பழக்க வழக்கங்களை கடைபிடித்தாலே உடலுக்கு எந்நோயும் வராது. இது போன்ற பயனுள்ள பதிவுகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.