நோட்டா படம் இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சி தகவல்

#Nota

தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் நோட்டா. ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்திற்க்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.இரண்டு மொழிகளிலும் சேர்த்து 25 கோடி வியாபாரமான இந்த படத்திற்க்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம். தயாரிப்பாளர் டிவி உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை மூலம் ஓரளவிற்கு கொஞ்சம் நஷ்டத்தில் இருந்து தப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.