படப்பிடிப்பு தளத்தில் சிம்பு இவ்வாறெல்லாம் செய்தார்! இயக்குனர் சுந்தர்.சி.யின் வெளிப்படையான பேச்சு

#Simbu
#Sundar.C

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பயங்கர பிசியாக நடந்து வருகிறது.போகிற வேகத்தை பார்த்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. படத்தில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிக்பாஸ் மஹத்தும் முக்கிய வேடத்தில் வருகிறார்.இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்திய பேட்டியில் சிம்பு பற்றி கூறியுள்ளார். அதில், கடுமையான காய்ச்சல் வந்ததை கூட எங்களிடம் மறைத்துவிட்டு, மிகக் கடுமையாக யூனிட்டாருடன் உழைத்த சிம்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.