பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது தற்கொலை தாக்குதல் – ராகுல் காந்தி விமர்சனம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதலாகும் என்று விமர்சித்தார். மேலும் மோசமாக வகுக்கப்பட்டு தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை என்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குற்றவியல் பொருளாதார ஊழல் என்றும் கூறினார். இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை என கூறிய ராகுல், அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பேசியவர், தகுதியற்ற அமைச்சர்கள் இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை எனவும் கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பேரழிவாகவே முடிந்து விட்டதாக சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளேதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் நினைவில் நிற்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Also see…