பன்றிக் காய்ச்சலால் 2 வாரங்களில் 49 பேர் உயிரிழப்பு!

பன்றிக்காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 2 வாரங்களில் 49 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவிவருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் 13-ம் தேதி வரையான காலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 49 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆயிரத்து 694 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 789 பேருக்கு நோய் தாக்கியுள்ளது. தமிழகத்தில் 48 பேர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோல, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நோய் பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Also see…