பாவம் பாக்யராஜ்… பலிகிடா ஆனதுதான் மிச்சம்! நேர்மையின் விலை ராஜினாமா!

சர்கார் திரைப்பட சர்ச்சை காரணமாக, தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சர்க்கார் பட விவகாரத்தில் சர்ச்சையை தொடர்ந்து பதவி விலகல் முடிவை அவர் எடுக்க வைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சர்கார் படத்தின் கதையும், பத்து வருடங்களுக்கு முன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப் பட்ட வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிப் பதிவு செய்திருந்த செங்கோல் என்ற திரைக்கதையும் ஒன்றுதான் என்று கூறி கடிதம் கொடுத்தார் பாக்யராஜ். மேலும், இரு தரப்புக்கும் இடையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டு, சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம், வருணுக்கான அங்கீகாரத்தைக் கொடுத்துவிடும்படி கூறியுள்ளார்.இந்நிலையில் பிரச்னை சுமுகமாக முடிந்ததாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், சன் பிக்சர்ஸுக்கு ஆதரவாக நிற்காமல், இரு கதையும் வேறு வேறு என்று சொல்லி, பாவப்பட்ட ஓர் எழுத்தாளனின் உழைப்பை அங்கீகரிக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் பக்கம் நிற்காமல் போனதற்கு பலிகிடா ஆகியுள்ளார் பாக்யராஜ்.இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்குள்ளேயே பலமான தாக்குதல்களை எதிர்கொண்டு, சர்ச்சை ஏற்பட்டதால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாக்யராஜ் கூறியுள்ளாராம். இது நேர்மை விரும்பிகளை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published.