பிக்பாஸில் யாருக்காகவும் இவர்கள் தோற்கக்கூடாது! பொங்கியெழுந்த பிரபல நடிகை – சர்ச்சையான விசயம்

#Bigg Boss
#Aishwarya Dutta
#Janani Iyer
#Riythvika
#Vijayalakshmi
#Aarthi

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. 100 நாட்களை கடந்து சில நாட்கள் அதிகமானாலும் இவ்வார இறுதியில் வெற்றியாளர்கள் முடிவுகள் அறிவிக்கப்படும்.இதற்கான ஓட்டெடுப்பு முன்பே தொடங்கிவிட்டது. யாஷிகா, பாலாஜி வெளியேறிய நிலையில் தற்போது ஃபைனலில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியின் முந்தய சீசன் போட்டியாளர் ஆர்த்தி அண்மையில் இந்த சீசனில் ஒரு விருந்தினராக கலந்துகொண்டு உற்சாகம் கொடுத்து சென்றார்.இந்நிலையில் மற்றவர்கள் மத்தியில் நம் தமிழ் பெண்கள் தோற்கக்கூடாது என ஜனனி, ரித்விகா, ஜனனி ஆகிய மூவருக்காக ஓட்டு கேட்டுள்ளார். மேலும் இந்த பதிவு ஐஸ்வர்யாவை சாதகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்! pic.twitter.com/bivMxXX01z— Actress Harathi (@harathi_hahaha) September 25, 2018