பிக்பாஸ் பிரபலத்துடன் கள்ளத்தொடர்பு- நடிகரை பிரிந்த தோனி பட நடிகை

#Disha Patani
#Bigg Boss

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. இவரது நடிப்பில் பிறகு வெளிவந்த படங்கள் அனைத்தும் ஹிட்டானதை தொடர்ந்து சல்மான்கானுடன் இணைந்து இவர் நடித்துள்ள பாரத் படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் திஷா பதானியின் முந்தைய காதல் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது. திஷா பாலிவுட்டில் பிரபலம் ஆகும் முன்பு தொலைக்காட்சி நடிகர் பார்த் சமதனை சுமார் ஓராண்டு காலம் காதலித்துள்ளார்.பார்த் சமதன் திஷாவை காதலித்த போதே பிக்பாஸ் பிரபலமான விகாஸ் குப்தாவையும் காதலித்துள்ளார். விகாஸும், பார்த்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை திஷா பார்த்துள்ளார். பார்த் தன்னை ஏமாற்றியது குறித்து அறிந்ததால் அவரை பிரிந்து சென்றுவிட்டாராம்.மேலும் திஷா தற்போது டைகர் ஷ்ராஃபை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.