பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து

பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிபிட்டுள்ளார்.

Best wishes on Pongal! pic.twitter.com/tZlvGLXgOZ
— Narendra Modi (@narendramodi) January 14, 2019
Loading… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.

மேலும் தமிழக மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “பொங்கல் திருநாள்” வாழ்த்துச் செய்தி.. #HappyPongal pic.twitter.com/wGL3qTbSF8
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 14, 2019

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து  செய்தியில்,  பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடி மகிழுங்கள் என்றும் எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும் என்றும்,  அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்து சென்ற ஆண்டு தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சியும், அல்லலும், துன்பமும் தந்த ஆண்டாகியபோதும், இரவு நீண்டதாக இருந்தாலும், விடியல் உறுதி என்பதைக் கட்டியம் கூறி, கிழக்கு வெளுக்கின்றது; கீழ்வானம் சிவக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது என குறிபிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் வாழ்த்து செய்தியில், தை பிறக்கட்டும்… தீமைகளிலிருந்து
மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்! என்று வாழ்த்திய அவர், தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்.

நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் எனக் குறிபிட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K. வாசன் அவர்களின் வாழ்த்து செய்தியில், பொங்கல் பண்டிகையை இனிதே கொண்டாடுவோம். தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ வாழ்த்தியுள்ளார்.

Also see… பொங்கல் பல கறி கூட்டு