பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சர்கார்! அதிலும் புது இடம்

#Sarkar
#Box Office
#Vijay

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சர்கார் தீபாவளி தான். கடந்த வருடத்தை அடுத்து இனி வரப்போகும் அடுத்த ஆண்டு தீபாவளியும் அவர்களுக்கு தான் என உறுதியாகிவிட்டது.இந்த வருட ஸ்பெஷலாக வந்துள்ள சர்கார் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் படம் சினிமா சிட்டியான சென்னையில் ஒரு நாள் கலெக்சனில் டாப் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.இதுவரை சென்னையின் முதல் நாள் வசூலில் இருந்த ரஜினியின் காலா படத்தை (ரூ 1.76 கோடி) முந்தி சர்கார் ரூ 2.37 கோடியாக வசூல் செய்துள்ளது.மேலும் இங்கே 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாம்.