புதுச்சேரியில் நாளை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

புதுச்சேரியில் தொழிலாளர் நலத்துறை சார்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

இது குறித்து தொழிலாளர்நலத்துறை கூடுதல் செயலாளரும், வேலைவாய்ப்பு துறையின் இயக்குனருமான வல்லவன் கூறியதாவது: ‘புதுச்சேரியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்த 23 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் பங்க பெறலாம்.

தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை மற்றும் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் 8,000 முதல் 15,000 ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற விரும்புகிறவர்கள் தங்களது சுயவிபரங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.