புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகைக்கு முன்னணி நடிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

#Mahesh Babu
#Fans

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு தனது மனைவியுடன் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிரெஸ்ட் மூலம் மருத்துவ உதவிகளை அளித்து வரும் இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையை தான் நடித்து வரும் மகரிஷி படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் அழைத்து சந்தித்து சில மணிநேரங்கள் பேசியுள்ளார்.ஆந்திரா ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவரான சிறுமி பர்வின் தனது விருப்ப நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்ததால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.