பெண்களால் எதையும் சாதிக்க முடியும்: 4 வயது சிறுமிக்கு நம்பிக்கை அளித்த வீராங்கனைகள்!

பெண் தீயணைப்பு வீரராக ஆசைப்படுகிறேன், என்னால் முடியுமா? என்று 4 வயது சிறுமி எஸ்மி கேட்ட கேள்விக்கு, பெண்களால் எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்று பெண் தீயணைப்பு வீரர்கள் பதிலளித்துள்ளனர்.

சிறுவயதில் நாம் என்னவாக ஆசைப்படுகிறோம் என்று மற்றவர்கள் கேட்கும்போது மருத்துவர், ஆசிரியர், பொறியாளர், விளையாட்டு வீரர் என ஒவ்வொருவரும் பல பதில்களை அளித்திருப்போம். குறிப்பாக பெண் குழந்தைகள் பலவிதமான கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் நாளடைவில் அவர்களுடைய கனவுகள் தகர்ந்துவிடும். அதற்கு காரணம் ஆண்களைப்போல் பெண்களை நாம் எல்லா துறைகளிலும் காண முடியாது என்பதால் பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே வேலை தேடிக்கொள்வார்கள்.  அப்படிதான் ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 4 வயது குழந்தைக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பல பதில்கள் கிடைத்துள்ளன.ஹன்னா சம்மர்ஸ் என்ற 4 வயது குழந்தையின் தாய், “என் மகள் என்னிடம் நான் ஆணாக பிறந்திருந்தால் தீயணைப்பு வீரராகியிருப்பேன் என்றாள். அதற்கு நான் பெண்களும் தீயணைப்பு வீரராக முடியும் என்று சொன்னேன். அதற்கு அவள் நான் புத்தகத்தில் ஆண்கள் மட்டுமே தீயணைப்பு வீரர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன் என்று என்னிடம் கூறினாள். நான் என் மகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் யாராவது எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பினார்.

My 4yr old came home yesterday saying she wished she was a boy so she could be a fireman. When I said girls can be firefighters too she said ‘but I’ve seen in books they are all boys and I don’t want to be the only girl.’ Any good vids/books I can show her? #FirefightingSexism
— Hannah Summers (@hansummers) January 18, 2019
Loading… இதையடுத்து, பல பெண்கள் தாங்கள் தீயணைப்பு துறையில் பணிபுரியும் புகைப்படங்களையும், வீடியோகளையும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Hi Hannah, your tweet made it to Ireland. Tell Esme we have an airport firefighter who is also a sports star with @dublinladiesg. Girls can do anything. pic.twitter.com/YVA2fzenAg
— Dublin Airport (@DublinAirport) January 19, 2019

இங்கிலாந்தின் Staffordshire பகுதியில் பணிபுரியும் ராப் ஹார்டன், “4 வயது சிறுமி எஸ்மி தீயணைப்பு வீரராக மட்டுமல்ல, என்னைப்போல் முதலாளியாவும் முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

Hi Hannah. Tell Esme not only can she be a Firefighter she can be the boss as well. pic.twitter.com/iioB0I7npp
— Rob Horton (@Rob_J_Horton) January 18, 2019

Hi Hannah! We really hope that your daughter continues to pursue her dream of being a firefighter! We wanted to share with her just a few of the amazing women within our emergency services that are encouraging and inspiring our next generation! pic.twitter.com/8AyUeks0m8
— Women Of 911 (@WomenOf911) January 19, 2019

ஐயர்லாந்தின் டப்ளின் பகுதியில் நிறைய பெண்கள் தீயணைப்பு துறையில் வேலை செய்கிறார்கள். மேலும் தேவைப்படுகிறார்கள், நீயும் வரலாம் என்று ஒரு பதிவு கூறுகிறது.

Hi Esme! Girls make great Firefighters and Paramedics, we have lots in Dublin Fire Brigade and we want more. If you are ever in Dublin make sure you drop in and see us. pic.twitter.com/6KvmJbNCy2
— Dublin Fire Brigade (@DubFireBrigade) January 20, 2019

Good morning! I heard your four y/o #daughter was discouraged because she felt she had to be a boy to be a #firefighter.
In #Vancouver🇨🇦, we have awesome firefighters who happen to be women!

& Nanaimo’s @Karen_Fry is a great Chief who happens to be a woman!

Pic @StraithDane pic.twitter.com/wAr7akTLwI

— Fire Chief Darrell Reid (@FireChiefReid) January 19, 2019

லண்டன் பகுதியில் பணிபுரியும் ரெபாக்கா ரோவ், நானும் தீயணைப்பு வீரர்தான், உங்கள் குழந்தை எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும். பாலினத்தை வைத்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்

Hi Hannah I’m also a firefighter in the London Fire Brigade, your daughter can be anything she wants. Don’t let gender stand in the way! #FirefightingSexism #firefighter #girlpower #girlscandoanything 🚒👨‍🚒 pic.twitter.com/KtgGzeUnqg
— Rebecca Rowe (@bexrower) January 18, 2019

.Esme, lots of our firefighters are girls and boys – some of them want to say hello to you! We would love to meet you and show you what we do. You can be a firefighter too! #firefightingsexism #thisgirlcan @NFCC_FireChiefs @StaffsFire @LondonFire Let’s keep this going! pic.twitter.com/ZV1IdrGp3S
— West Midlands Fire (@WestMidsFire) January 18, 2019

Also watch