பெண்களை விட ஆண்களுக்கு கணைய புற்றுநோய் அதிகம் ஏற்பட காரணங்கள்

உலகில் உள்ள பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோயென்றால் அது புற்றுநோய்தான். ஏனெனில் புற்றுநோய்க்கான மருந்துகளும் சரி, அதற்கான சிகிச்சை முறைகளும் சரி அவ்வளவு சுலபத்தில் பெறமுடியாதவை. அதற்கு காரணம் அதன் விலை மற்றும் வலிமிகுந்த சிகிச்சை முறையாகும். யாரும் விரும்பி புற்றுநோயை விரும்பி ஏற்பதில்லை, இருப்பினும் அது ஏற்பட உங்களின் பழக்கவழக்கங்களும், செயல்களும்தான் காரணம். நீங்கள் சிறியதென நினைத்து செய்யும் சாதாரண செயல்கூட உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். புற்றுநோய்களில் பல வகை உள்ளது அதில் நம்மில் பலரும் அறியாத ஒரு புற்றுநோய் என்னவெனில் கணைய புற்றுநோய்தான். மற்ற புற்றுநோய்களை போலவே கணைய புற்றுநோய் ஏற்படவும் உங்களின் செயல்களே காரணம். இந்த கணைய புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் புகையிலை பயன்பாடு கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நார்மலான மனிதர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். புகைபிடிப்பது மட்டுமின்றி மற்ற புகையிலை பொருட்களும் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். புகையிலை பயன்பாடு 30 சதவீதம் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். அதிக எடை மற்றும் உடல் பருமன் உடல் எடை அதிகமாக இருப்பதும் கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாகும். உடல் எடை அதிகமா இருக்கும்போது உங்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். இடுப்பை சுற்றி அதிக சதை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பணியிடம் நீங்கள் வேலை செய்யும் இடங்களை பொறுத்தும் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். வேதியியல் சேர்மங்கள் அதிகம் உள்ள தொழிற்சாலைகள், அதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் தொழிற்சாலைகள், நீண்ட நேரம் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்வது போன்றவை உங்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். சிரோசிஸ் கல்லீரலில் உள்ள சேதமடைந்த திசுக்கள் வடு திசுக்களால் மாற்றப்படும்போது சிரோசிஸ் ஏற்படுகிறது. பெரும்பாலான சிரோசிஸ்கள் அதிகளவு ஆல்கஹால் பயன்பாட்டால் ஏற்படுகிறது. அதேபோல ஈரலில் இரும்புசத்து அதிகரிக்கும்போது ஹீமோக்ரோமடோசிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இது கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. MOST READ:ஐந்து நாள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிட்டால் என்ன ஆகும்னு தெரியுமா? வயது இந்த காரணங்களை நீங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. வயது அதிகரிக்க அதிகரிக்க கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். பெரும்பாலும் கணைய புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்க்ளின் வயது 45 வயதிற்கு மேலாக இருக்கும். ஆனால் இப்பொழுது இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். சர்க்கரை நோய் பல ஆய்வுகளின் படி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிய வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்க்ளுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதேசமயம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே கணைய புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. குடும்ப வரலாறு பரம்பரை வழியாகவும் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சில குடும்பங்களில் மரபு வழியாக இந்த நோய் ஏற்படக்கூடும். சிலசமயம் பலவீனமான மரபணுக்கள் கூட இது ஏற்பட காரணமாக அமைகிறது. ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் அது மரபு வழியாக வரவில்லை என்பதே ஆறுதலான தகவல். பாக்டீரியா தொற்று பொதுவான பாக்டீரியாவான ஹெலிகோபாக்டர் பைலோரி என்னும் பாக்டீரியா சுருக்கமாக ஹெச். பைலோரி வீக்கம் மற்றும் அல்ஸர் போன்ற நோய்களை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுவது உங்களுக்கு வயிற்று புற்றுநோய் அல்லது கணைய புற்றுநோயை ஏற்படுத்தும். இந்த பாக்டீரிய தொற்றால் வயிறு புற்றுநோயை விட கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். MOST READ:சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த சீனித்துளசி உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.