பெரியார் சிலை உடைப்பு! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தேர்தல் நேரத்தில் அமைதியைக் குலைக்கும் விதத்தில் செயல்பட்ட நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசிய திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, கிருஷ்ணரை விமர்சித்து பேசியிருந்தார்.கி.வீரமணியின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலையில் புதுக்கோட்டையிலுள்ள அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையிலுள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த திராவிடக் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையை காலிகள் சிதைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அமைதியைக் குலைக்கும் விதத்தில் ஈடுபட்ட நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தயவுதாட்சண்யமின்றி, இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading…

Also see: