பேட்டரிகளுக்கு எக்ஸ்ட்ரா லைஃப் கொடுக்கும் ‘டார்க் மோட்’!

இறுதியாக ஆண்ட்ராய்டு போன்களில் டார்க் மோடை பயன்படுத்தினால், பேட்டரி இயங்க குறைவான பவரை எடுத்துக் கொண்டு அதன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பதை கூகுள் உறுதி செய்துள்ளது.இந்த வாரம் நடைபெற்ற ஆண்டராய்டு டெவலப்பர்கள் மாநாட்டில் ஸ்மார்ட்போன்கள் பேட்டரி வாழ்க்கை குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டது.அப்போது, ஆப்கள் அதிகப்படியான பேட்டரி பவரை பயன்படுத்துவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து கூகுள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்களிடம் பேசியது. OS மற்றும் ஆப்களின் தீம் நிறத்தை ஒட்டுமொத்தமாக கருப்பு நிறமாக மாற்றிவிடும்.யூடியுப்-ஐ டார்க் மோடில் முழு வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது, 43 சதவீத குறைவான பவர் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை கூகுள் விளக்கியது. ஆப் டெவலப்பர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வெள்ளை நிறம் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை கூகுள் தெளிவு படுத்தியது.மேலும் வெள்ளை நிறத்தை இரண்டாம் பட்ச நிறமாக பயன்படுத்த கூகுள் அறிவுறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.