பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு… தகுதி, பலனடையும் சாதிகள் மற்றும் பல!

பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ளது. அன்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி போன்றவை தேர்தலில் பாதிக்காமல் இருக்கப் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினர் என்று மத்திய அரசு கூறிய நிலையில் ஆண்டு வருவாய் 8 லட்சம் வரை உள்ளவர்கள் இந்த இடதுக்கீட்டில் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.எனவே மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் பயன்பெற கூடிய சாதிகள் எவை, தகுதி என்ன, எப்படி அமலுக்குக் கொண்டு வரப்படும், சவால்கள் என்ன, இதில் உள்ள அரசியல் போன்றவற்றை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பலன் அடையைப் போகும் சாதிகள்
1. பிராமின், பனியாஸ் உள்ளிட்ட பல வர்த்தகச் சாதிகள், ராஜ்புத்ஸ், ஜார்ஸ், மராதாஸ், குஜார்ஸ், புமிஹார்ஸ், காபுஸ், காம்மாஸ்
2. பொதுப்பிரிவில் வரக்கூடிய சில ஏழை இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் பலனடைவார்கள்
இட ஒதுக்கீட்டிற்கான தகுதிLoading… 1. இட ஒதுக்கீடானது குடும்ப வருவாய், சொத்துக்களின் அளவைப் பொருத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் உள்ள பொதுப் பிரிவினர்கள் பயனடைவார்கள்.
3. 5 ஏக்கருக்கும் கூடுதலாக விவசாய நிலம் இருக்கக் கூடாது.
4. 1000 சதூர அடிக்கும் கூடுதலான இடத்தில் வீடு இருக்கக் கூடாது.
இட ஒதுக்கீட்டை அமலுக்குக் கொண்டு வருவதில் உள்ள செயல்பாடுகள்
1. குளிர் காலக் கூட்டத்தின் கடைசி நாளான இன்று இந்தச் சட்டத்திருத்த மத்திய அரசு அவற்றிற்குக் கொண்டு வந்துள்ளது.
2. இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு கூடுதலாக ஒரு நாள் குளிர் காலக் கூட்டத்தை நீட்டிக்க வாய்ப்பு.
3. அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 15 மற்றும் 16-ல் திருத்தம் செய்ய வேண்டும்.
4. மூன்றில் 2 பங்கு அவை உறுப்பினர்கள் இதனை ஏற்க வேண்டும்.
5. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை இது பாதிக்கும்.
இட ஒதுக்கீட்டை அமலுக்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்கள்
1. தற்போது உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு 60 சதவீதமாக அதிகரிப்பது குறித்த முடிவுகள்.
2. உச்ச நீதிமன்றத்தின் பிரபல நீதிபதி இட ஒதுக்கீட்டிற்கான வரம்பை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று வழங்கிய தீர்ப்பு.
3. மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்.
4. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பதில் அரசியல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிருப்பது.
இதன் பின்னணியில் உள்ள அரசியல்
1. தேர்தலின் போது ஓபிசி மற்றும் பிற்படுத்தபாட்டோரை விட வெற்றிக்கு உதவிய ஆதிக்கச் சாதியனரின் வாக்குகள்.
2. பொதுப் பிரிவினரின் ஓட்டை தேர்தலின்போது கவர முடியும் என்ற மத்திய அரசின் கனவு.
3. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இழந்த உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர பாஜக முயற்சிப்பது.
4. பாஜக மட்டும் இல்லாமல் பிற எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்தாலும் வாக்குகள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள்.

மேலும் படிக்க: உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் 10% இட ஒதுக்கீடு?