பொது இடத்தில் லவ் புரோபோசல்… திருமண ஜோடி கைது…!

பொது இடத்தில் லவ் புரோபோஸ் செய்த திருமணம் செய்ய உள்ள ஜோடி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், பொது இடங்களில் பொது மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அந்நாடு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.இந்நிலையில், அராக் நகரில் வணிக வளாகம் ஒன்றில் ஒரு ஆண் பெண்ணுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்துக்கு சம்மதமா? என்று கேட்ட வீடியோ வைரலாக பரவியது. ஆணின் கேள்விக்கு அந்தப் பெண் சம்மதிக்க பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து அண்பை பறிமாறிக்கொள்கின்றனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அவர்கள் இருவரும் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக போலிசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

📹 Man publicly proposes to woman at shopping mall in Arak, central #Iran
Both arrested for “marriage proposal in contradiction to islamic rituals… based on decadent Western culture,” then released on bail pic.twitter.com/eKdlNX9BteLoading… — Sobhan Hassanvand (@Hassanvand) March 8, 2019