மறைந்த ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ள சர்கார் படக்குழு! வலுக்கும் பிரச்சனை

#Vijay
#Sarkar

விஜய் நடித்துள்ள சர்கார் படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த படத்தை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனியாக இந்த படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான இந்த படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திர பெயரான கோமனவள்ளி தான் இன்று பலரது விவாத பொருளாக மாறியுள்ளது.ஏனென்றால் இந்த பெயர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பட்ட பெயராகும். இந்த பெயரை தெரிந்தே தான் முருகதாஸ் பயன்படுத்தியுள்ளார் என்று அரசியல் பிரபலங்கள் பலரும் தனது கருத்துக்களை கூறிவருகின்றனர்.இதனால் இந்த பிரச்சனை பெரிய பூதங்கரமாக மாறும் என்றே தெரிகிறது.