மறைந்த நடிகை ஸ்ரீதேவியாக நடித்த ரகுல் பீர்த் சிங்க்கு இத்தனை கோடி சம்பளமாம்!

#Sridevi
#Rakul Preet Singh

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா வரை சென்று கலக்கியவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். அவரின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கும் முயற்சியில் அவரின் கணவர் இறங்கியுள்ளார்.இந்நிலையில் தெலுங்கில் மறைந்த நடிகர் என்.டி. ஆரின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் நடிக்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவியின் ரோலும் இருக்கிறது.அதில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் ரகுல் பீர்த் சிங் தான் நடிக்கிறாராம். அவருக்கு படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகள் தான். இதற்கு அவருக்கு ரு1 கோடி சம்பளமாம்.