மலம் கழிக்கிற இடத்துல எரிச்சலா இருக்கா? மலம் கழிக்கும்முன் இத செய்ங்க… சரியாகிடும்…

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் How to மலம் கழிக்கிற இடத்துல எரிச்சலா இருக்கா? மலம் கழிக்கும்முன் இத செய்ங்க… சரியாகிடும்… How To lekhaka-Suganthi rajalingam By Suganthi Rajalingam |

Updated: Friday, May 17, 2019, 15:54 [IST]
சிலருக்கு மலம் கழிக்கும் போது தீவிர எரிச்சல் ஏற்படும். இதனால் அதிக வலியை தாங்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் இதற்காக டாக்டரை அணுகாமல் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இதை சரி செய்யலாம். இந்த மாதிரியாக மலவாய் பகுதியில் எரிச்சல் ஏற்படக் காரணம் சுத்தமின்மை, சரி யற்ற உணவுப் பழக்கம் இவற்றால் ஏற்படுகிறது. எனவே இதைப் போக்க சத்தத்துடன் இருத்தல், சரியான உணவுப் பழக்கம், கற்றாழை ஜெல், சூடான மற்றும் குளிர்ந்த பேக்6, பட்டர் மில்க், பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் முள்ளங்கி போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் இயற்கை சிகிச்சைகளான பிசின்கள், வெள்ளை ஓக், சல்பர் மலர்கள், பெட்ரோலியம் ஜெல்லி, லெமன் ஜூஸ், புதினா ஜூஸ் மற்றும் தேன் போன்றவற்றை பயன்படுத்தி பலன் பெறலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மலக்குடல் என்றால் என்ன? மலக்குடல் தான் மனித குடலின் கடைசி பகுதி. இதில் மலவாய் காணப்படும். இந்த மலவாய் வழியாகத் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படும். இந்த 5 அங்குல நீளத்தில் அமைந்துள்ளது. நமக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் இந்த மலவாய் பகுதியில் ஏற்படும் பிளவுகள், இரத்தக் கசிவுகள் போன்றவை வலியை ஏற்படுத்தும். MOST READ: சாப்பிட்டதும் வயிற பிசையுதா? சும்மா விட்றாதீங்க… அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்… காரணங்கள் மலவாய் பகுதியில் எரிச்சல் ஏற்பட கீழ்க்கண்ட காரணங்கள் காரணமாக அமைகின்றன. இரத்தக் கசிவு, பிரக்டிடிஸ், ஒவ்வாமை நிலைமைகள், கர்ப்பம், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS), குடல் பிளவுகள் மற்றும் பல. இரத்தக் கசிவு இரத்தக் கசிவு என்பது பைல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மலவாய் பகுதியில் உள்ள இரத்த குழாய் வீக்கமடைந்து அதன் சுவரை தொட்டுக் கொண்டு இருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தக் கசிவு, எரிச்சல், அரிப்பு, வலி மற்றும் அழற்சி ஏற்படும். பிரக்டிடிஸ் ரொனால்ட் டபிள்யூ. ரேவன், எஃப்.சி.சி.சி., கூற்றுப்படி, மலக்குடலில் ஏற்படும் அழற்சியும் எரிச்சலுக்கு காரணம் என்கின்றனர். சுத்தமின்மை மலவாய் பகுதியை சுத்தம் இல்லாமல் வைக்கும் போது அந்த பகுதியில் எரிச்சல், இரத்தக் கசிவு ஏற்படலாம். கர்ப்பம் கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அந்த மாதிரியான சமயங்களில் மலவாய் பகுதியில் எரிச்சல் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகு இந்த எரிச்சல் தானாகவே சரியாகி விடும். MOST READ: மீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா? இந்த 5 பொருள சாப்பிடுங்க… எரிச்சலுடன் மலம் கழித்தல் வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்றவை, அடிக்கடி மலவாய் பகுதியை துடைப்பது போன்ற பிரச்சினைகள் எரிச்சலை ஏற்படுத்தும். அதிக அழுத்தத்துடன் மலம் கழித்தல் மலம் கழிக்கும் போது அதிக அழுத்தத்தை கொடுப்பதும் மலவாய் பகுதியில் பிளவு ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தும். காரசாரமான கொழுப்பு உணவுகள் காரசாரமான கொழுப்பு உணவுகளை சாப்பிடும் போது மலவாய் பகுதியில் எரிச்சல், சீரணமின்மை, அசெளகரியம், வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும். மேலும் கொழுப்பு அதிகமான உணவுகள் மலச்சிக்கலை உண்டு பண்ணும். சர்க்கரை பொருட்கள் இந்த பொருட்களை அதிகமாக சாப்பிடும் போது எரிச்சல் ஏற்படும். இதர காரணங்கள் இரத்தக் கசிவு கூட மலவாய் பகுதியில் ஏற்படும் பிளவு, குடல் புற்று நோய் போன்றவையாக இருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. அறிகுறிகள் இரத்தக் கசிவு இரத்தம் கசிதல் எரிச்சல் அரிப்பு வலி அழற்சி எரிச்சலுடன் மலம் கழித்தல் வயிற்று போக்கு மலச்சிக்கல் வயிற்று வலி குமட்டல். வயிறு நோய்கள் சீரணமின்மை அசெளகரியம் வயிற்று போக்கு வாந்தி மலவாய் பகுதியில் ஏற்படும் எரிச்சலை உடனே கண்டு மருத்துவரிடம் சென்று விட்டால் பைல்ஸ் வராமல் தடுக்கலாம். இதற்கு வீட்டு முறைகளும் உண்டு. அதுவும் நல்ல பலனளிக்க கூடியது. MOST READ: மில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க… பால்ல இந்த பவுடர போடுங்க… உடனே திக்காயிடும்… மாங்காய் கொட்டைகள் மாங்காய் விதைகளை உலர வைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். மலவாய் பகுதியில் எரிச்சல் இருப்பவர்கள் 2 கிராம் இந்த பவுடருடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிட்டு வரலாம். இந்த முறையை 1000 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் இயற்கையாகவே அழற்சியை எதிர்க்கும் பொருள் இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும். கொத்தமல்லி விதைகள் பைல்ஸ் போன்றவற்றிற்கு கொத்தமல்லி விதைகள் மிகவும் சிறந்தது. எனவே சில கொத்தமல்லி விதைகளை இரவில் தூங்குவதற்கு முன் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் அதை சாப்பிடுங்கள். மலவாயில் ஏற்படும் எரிச்சல், இரத்தக் கசிவு போன்றவை சரியாகி விடும் என்று டாக்டர் டெனிஸ் சார்லஸ் கூறுகிறார். இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஸ்டோமிக், ஸ்பாஸ்போலைடிக் போன்ற பொருட்கள் உள்ளன. இது பைல்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. பே பெர்ரி பே பெர்ரி மலவாய் பகுதியில் இருக்கும் வீக்கத்தை குறைக்கிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், அனஸ்தீசிடிக், உணர்வற்ற தன்மை போன்ற பொருட்கள் இதில் உள்ளன. எனவே பே பெர்ரி, கூட்டு காயங்கள், வொயிட் ஓக், கோல்டென்ஷீல் வேர் போன்றவை கலந்த களிம்புகளை கூட பயன்படுத்தலாம். வாழைப்பழம் வாழைப்பழத்தை நன்றாக பால் விட்டு பிசைந்து மலவாய் பகுதியில் போட்டு வந்தால் எரிச்சல் குறைந்து விடும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த குழாயை விரிவடையச் செய்து மலவாய் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இது ஒரு அஸ்ட்ரிஜெண்ட் மாதிரி செயல்பட்டு மலவாய் பகுதியில் எரிச்சலுக்கு காரணமாகும் திசுக்களை சுருக்குகிறது. வாழைப்பழத்தில் நீரில் கரையைக் கூடிய கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. இதில் நீரில் கரையைக் கூடிய நார்ச்சத்துகள் சீரண செயலை மெதுவாக்குகிறது. நீரில் கரையாத நார்ச்சத்துகள் மலச்சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. க்ரான் பெர்ரி 1 ஸ்பூன் க்ரான் பெர்ரியை அரைத்து அதை ஒரு சீஸ்துணியினுள் வைக்க வேண்டும்.யாருக்கு மலவாய் பகுதியில் வீக்கம் இருக்கிறதோ அவர்கள் அதை அங்கே வைக்க வேண்டும். இந்த முறை பைல்ஸ், மலவாய் எரிச்சல் போன்றவற்றைபோக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தீவிர குடல் பிரச்சினைகளுக்கு கூட இதை பயன்படுத்தலாம். அத்தி பழம் அத்தி பழம் மலவாய் எரிச்சலுக்கு பெரிதும் பயன்படுகிறது. 4 அத்தி பழங்களை எடுத்து இரவில் ஊற வைத்து கொள்ளுங்கள். காலையில் அதை சாப்பிடுங்கள். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது இன்னும் நல்லது. அத்தி பழ இலைகளைக் கூட கசக்கி எரிகின்ற பகுதியில் வைக்கலாம். இதை வெளிப்புறமாக, உட்புறமாக என இரு வழிகளில் எடுத்துக் கொண்டால் சீக்கிரமே பிரச்சினை சரியாகி விடும். சீரக விதைகள் சீரக விதைகள் வீக்கத்தை சுருங்கச் செய்து எரிச்சலை போக்குகிறது. சீரக பொடியை தண்ணீர் விட்டு கெட்டிப் பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மலவாய் பகுதியில் அப்ளே செய்யுங்கள். இது உடனே குளிர்ச்சியை தந்து எரிச்சலை போக்கி விடும். வறுத்த அல்லது வறுக்காத சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடும் போதும் நல்ல பலன் கிடைக்கும். MOST READ: போன் பேசறத கண்டிச்சதால அக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி தயிர் மற்றும் பட்டர் மில்க் புரோபயோடிக் உணவுகள் மலச்சிக்கலை போக்க பெரிதும் பயன்படுகிறது. இது எளிதாக மலவாய் வலியை போக்கி விடும். பட்டர் மில்க் உடம்பிற்கு உடனே குளிர்ச்சியை தந்து எரிச்சலை போக்கி விடும். எனவே தயிர் மற்றும் பட்டர் மில்க் இரண்டையும் சேர்த்து கொண்டால் சீக்கிரம் மலவாய் எரிச்சல் போய்விடும். லெமன் ஜூஸ் மற்றும் கொத்தமல்லி ஜூஸ் லெமன் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது வீக்கத்தையும் எரிச்சலையும் போக்க வல்லது. புதினா ஜூஸ் இயற்கையாகவே குணப்படுத்தும் ஆற்றலையும், அனஸ்தீசிடிக் விளைவையும் ஏற்படுத்தி எரிச்சல் அரிப்பை போக்குகிறது. மலவாய் பகுதியில் எரிச்சல் இருப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸ் மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வரலாம். கொத்தமல்லி ஜூஸூடன் 5 கிராம் சர்க்கரை சேர்த்து ஒரு நாளைக்கு 2 தடவை என குடித்து வரலாம். நல்ல ரிலீவ் கிடைக்கும். சூடான மற்றும் குளிர்ந்த பேக் சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடம் மலவாயில் ஏற்படும் எரிச்சலை வீக்கத்தை குறைத்து விடும். இதற்கு வெதுவெதுப்பான நீரை டப்பில் நிரப்பி உட்கார்ந்து இருக்கலாம். வீக்கம் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி வைக்கும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி மலவாய் வீக்கம் குறைந்து விடும். முள்ளங்கி முள்ளங்கியில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. இது மலம் வெளியேறுவதை கட்டுப்படுத்தவும், ஸ்பெரிஸ்டோலிக் நகர்வை தூண்டவும், சீரண என்சைம்களை சுரக்க செய்தல் போன்றவற்றால் மலவாயில் எரிச்சல் இல்லாமல் செய்து விடுகிறது. முள்ளங்கியை துருவியோ அல்லது சாறு எடுத்தோ உப்பு சேர்த்து பயன்படுத்தலாம். இந்த காயை பால் சேர்த்து கூட பயன்படுத்தி பலன் பெறலாம். முள்ளங்கி இடுப்பு பகுதியைச் சுற்றி இருக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கர்ப்ப பையில் இரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை நிறைய மருத்துவ நன்மைகளை தருகிறது. கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை எரிச்சல் இருக்கும் மலவாய் பகுதியில் அப்ளே செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு, தீப்பட்ட புண் போன்றவற்றிற்கு கூட பயன்படுத்தலாம். MOST READ: 4 சொட்டு நல்லெண்ணெய உங்க சிறுநீர்ல விடுங்க… என்ன நோய் இருக்குனு தெரிஞ்சிடும்… தவிர்க்க வேண்டியவை காரசாரமான உணவுகளை தவிருங்கள், டீ, காபி மற்றும் சர்க்கரை போன்றவற்றை தவிருங்கள். இப்படி தவிர்ப்பது மலச்சிக்கல் எரிச்சலை ஓரளவு போக்கும். மேற்கண்ட வீட்டு முறைகள் பிரச்சினைகளை தீர்க்கும். தேவைப்பட்டால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.