மாயாவதியின் செயலாளரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் செயலாளரின் வீடு, அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

2002-2003ஆம் ஆண்டில் உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்த மாயாவதிக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம். இவர், அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்றதும் முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றபட்டார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.இந்நிலையில், டெல்லி மற்றும் லக்னோவில் நெட் ராமிற்கு சொந்தமான 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கலால் துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளில் இருந்த அவர், 90 கோடி ரூபாய் அளவுக்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வரி ஏய்ப்பு தொடர்பாக நெட்ராமிடம் அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். இது தொடர்பாக மாயாவதி கூறுகையி, அரசியல் உள்நோக்கத்துடன், பழிவாங்கும் நடவடிக்கையாக விசாரணை அமைப்புகளை இதுபோன்று பாஜக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

Also see… சென்னை கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடல்