மாலைநேரத்தில் பானிபூரி சாப்பிடலாமா? எடையை குறைக்க நினைப்பவர்கள் ஏன் சாப்பிடக்கூடாது? – பதில்கள் இதோ

பானி பூரியைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிராமப்புறங்களில் பானிபூரி மிகச்சிறந்த மாலைநேர ஸ்நாக்காக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த பானி பூரிக்கு இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்கள் உண்டு. கோல்கப்பா, புக்ச்சா, கப்சுப் என பல பெயர்களில் இந்தியா முழுக்க அழைக்கப்படுகிறது. இது மிக முதன்மையான ஸ்ட்ரீட் ஃபுட்டாக இருக்கிறது. ஆனால் பலரும் இந்த பானிபூரியை ஆரோக்கியமில்லாத உணவு என்று கருதுகிறார்கள். சிலரோ இதில் சேர்க்கப்படுகின்ற சில உட்பொருள்கள் மிகவும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஊட்டச்சத்துக்கள் பானி பூரி என்பதில் இருக்கின்ற பூரி ரவை மற்றும் மாவினைச் சேர்த்து செய்யப்படுவது. ரவை தான் இதில் மிக முக்கியமான பொருள். இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. அதோடு மட்டுமல்ல, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. MOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும் நன்மைகள் ரவையும் மாவும் சேர்த்து பூரி செய்யப்பட்டாலும் அதில் உள்ளே ஸ்டப்பாக வைக்கப்படும் பொருள்களும் மிக முக்கியமானவை.அவை என்னென்ன? அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்று பார்ப்போம். பானிபூரிக்குள் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கும் பட்டாணியும் வைக்கப்படுகிறது. அதன்மேல் சிறிது வெங்காயம் மற்றும் புதினா இலைகள் அரைத்து சேர்க்கப்பட்ட புளித்தண்ணீர் ஊற்றி தயாரிக்கப்படும் பானி சேர்க்கப்படுகிறது. கொண்டைக்கடலையில் அதிகமாக நார்ச்சத்தும் புரதமும் இருக்கின்றது. மேலும் அதில் பல்வேறு வகையான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்து இருக்கின்றன. அதேபோல், உருளைக்கிழங்கிலும் வைட்டமின் பி6, வைட்டமின் சி, மாங்கனீசு, பாஸ்பரஸ், நியாசின் ஆகியவை நிறைந்திருக்கின்றன. சுகாதாரம் பொதுவாக பானிபூரி தெருக்களில் விற்கப்படும் இடங்கள் மற்றும் அதன் சூழல்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அந்த உணவே சுகாதாரமற்றது என்ற ஒரு மாயை நம்மிடையே பரவிவிட்டது. ஆனால், உண்மையிலேயே அதில் சேர்க்கப்படும் ரவை, மாவு, புளி, புதினா, வெங்காயம், உருளைக்கிழங்கு, புதினா என அத்தனையும் ஆரோக்கியமானவை தான். சத்து அளவுகள் 6 பானிபூரிகளில் கிட்டதட்ட 36 கலோரிகள் உள்ளடங்கி இருக்கின்றன. வாயுத்தொல்லை இருக்கிறது அல்லது உருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்கள் அதற்கு பதிலாக பாசிப்பயறை முளைகட்டி, வேகவைத்து சேர்த்து வீட்டிலேயே மிகவும் சத்தான பானிபூரியை வீட்டில் நாமே செய்துவிடலாம். கொழுப்புச்சத்து 70.8 கிராம் அளவுள்ள பானி பூரியில், 4 கிராம் அளவுக்கு கொழுப்புச்சத்து இருக்கின்றது. அதுவும்கூட, அந்த பூரியைப் பொரிக்கும் எண்ணெயின் வாயிலாகவே வந்தது. அதைத்தாண்டி, உண்மையிலேயே அதில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு வெறும் 2 கிராம் மட்டுமே. MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ… ட்ரை பண்ணிப் பாருங்க… புரதம் மற்றும் வைட்டமின்கள் கொழுப்புச் சத்தை ஈடு செய்வதற்கு நாம் சேர்க்கிற கருப்பு அல்லது வெள்ளை சுண்டல் பெரும் துணை புரிகிறது. 2 கிராம் அளவுக்கு புரதச்சத்து அதிகமாகி விடும். அதோடு ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி மற்றும் டி ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. சோடியம் மொறுமொறுப்பான அந்த பூரியில் 40 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் நிறைந்திருக்கிறது. அதனால், நம்முடைய உணவில் நாம் உணவில் எடுத்துக் கொள்கின்ற அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கின்ற சோடியத்தின் அளவு குறைகிறது. எடை குறைப்பில் பானி பூரி எடையைக் குறைப்பதற்கான டயட் இருப்பவர்கள் இந்த பானிபூரியை சாப்பிடலாமா என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. இது மிகவும் லைட்டான உணணவு தான், மிகக்குறைந்த கலோரி தான், இதனால் உடல் எடையில் மாற்றம் உண்டாகுமா என நீங்கள் யாசிக்கலாம். ஆனால் நிச்சயம் தீவிரமாக எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பானி பூரி சாப்பிடும் பழக்கத்தை ஆதரிக்கக் கூடாது. ஏனென்றால், அதில் சேர்க்கப்படும் இனிப்பு தண்ணீர், உருளைக்கிழங்கு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எப்போதாவது சாப்பிட்டு உங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அதிலுள்ள இனிப்பு தண்ணீர் மற்றும் அதிகப்படியான உப்பு வயிறு உப்புச் செய்யும். வாயுத்தொல்லை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மாலை நேரம் மிகமிக தவறான நேரம். MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்? எப்போது சாப்பிட வேண்டும்? மாலை நேரம் நிச்சயம் சாப்பிடக் கூடாது. பானி பூரி சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற நேரம் மதியம் தான். மதிய நேரத்தில் குறிப்பாக, மதிய உணவுக்கு முன்னும் பின்னுமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான்கு மணிக்கு மேல் தொடக்கூடாது. வேண்டுமென்றால், அந்த சமயங்களில் ஒரு கப் பப்பாளி அல்லது ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். அதனால் மதியம் நீங்கள் சாப்பிடும் பானிபூரியில் உள்ள உப்பின் அளவு சமன்செய்யப்படும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.