மீண்டும் பெரிதாகும் சாப்பாடு விவகாரம் : ஆஸ்திரேலியா மாட்டிறைச்சிக்கு நோ சொன்ன பிசிசிஐ

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது இந்திய வீரர்களுக்கு அசைவ உணவு பட்டியலில் மாட்டிறைச்சியை நீக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.

மாட்டிறைச்சி வேண்டாம்:ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது, இந்திய அணி வீரர்களுக்கு வழங்க இருக்கும் உணவுப் பட்டியலிலிருந்து மாட்டிறைச்சியை நீக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது, வழங்கப்பட்ட அசைவ உணவுகளால் வீரர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளானதாக இந்திய கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் மாட்டிறைச்சி :அதுமட்டுமல்லாமல், கடந்த இங்கிலாந்து தொடரின் போது, இந்திய வீரர்களுக்கு மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுவதாக பிசிசிஐ பகிர்ந்த உணவுப் பட்டியலால் பலரும் எதிர்ப்பு கிளம்பியது.

@BCCI Why is Indian team served beef ? Oh it’s only indian cows are holy !!!@BDUTT— Keyur Pathak (@keyurpathak) 1534004226000
அதனால் மீண்டும் மாட்டிறைச்சி விவகாரம் பெரிதாகக் கூடாது என்பதற்காக, ஆஸி தொடரின் போது மாட்டிறைச்சி வேண்டாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க :
ஆஸி.,க்கு எதிரான டி20 போட்டி: தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு

தோனி இல்லாத இந்திய அணி :ஆஸ்திரேலியா தொடரில் முதலில் 3 டி20 போட்டிகள் வரும் நவம்பர் 21,23,25 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளன.

மேலும் படிக்க :
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்த போட்டிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணி விபரம் :விராத் கோலி (கேப்டன்), ரோஹித் (துணை கேப்டன்), ஷிகர் தவான், KL ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட் (wk), குல்தீப் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர்,குணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா,உமேஷ் யாதவ்,கலீல் அகமது. விபரம் :

Team for three T20I match series against Australia announced. Virat Kohli (C), Rohit (vc), Shikhar, KL Rahul, Shre… https://t.co/wIjt9KxvXS— BCCI (@BCCI) 1540573602000