மீ டூ வை பற்றி ஆவேசமாக குரல் எழுப்பிய கமல்ஹாசன்!

#Kamal Haasan
#MeToo

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பரபரப்பாக இருந்த விஷயம் மீடூ. இது இப்போது கூட அனைவரது பேச்சிலும் இருக்க தான் செய்கிறது.பிரபலங்கள் அனைவரது பேட்டியிலும் இந்த விஷயம் இடம் பெறுவதை தவிர்க்க முடியாதாகி விட்டது. அது போல தான் கமல் சமீபத்திய தனது பேட்டியில் இந்த மீடூவிற்கு ஆதரவாக தனது குரலை கொடுத்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,” மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். தமிழில் ‘நானும்’ என்று அர்த்தம். இந்த ‘நானும்’ என்ற சொல், கொஞ்சம் கொஞ்சமாக கோரஸாகிக் கொண்டிருக்கிறது.இதை ஏன் இப்போது சொல்லுகிறார்கள். இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். தவறில்லை. தைரியமாகவும் நியாயமாகவும் எழுந்துள்ள குரல், இன்னும் எழட்டும். இன்னும் இன்னும் தைரியமாக குரல்கள் ஒலிக்கட்டும். அதை கேலி செய்யாதீர்கள்.உடன்கட்டை ஏறுவது தவறு என்பதை 200 வருடங்களுக்கு முன்பு சொன்னதும் சரிதான். இப்போது சொன்னாலும் அது சரியானதுதான்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.