முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணம்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும், தொழிலதிபா் ஆனந்த் பிரமலும் நீண்ட கால நெருங்கிய நண்பா்களாக இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை பாிமாறிக்கொண்டனா். இவா்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல்

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குட் தனது தந்தை யுடன் சென்றபோதுஇஷா அம்பானி அவரது காதலன் ஆனந்த் பிரமோல்

இதனைத் தொடா்ந்து இவா்களது நிச்சயதாா்த்தம் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக இத்தாலியில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்தில் இந்திய பாரம்பரிய முறையில் இருவரின் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aso see…