முதுகு தண்டு பிரச்சனை இருந்தும் அஜித் மட்டுமில்லை விஜய்யும் நடித்த ரிஸ்க்கான காட்சி- ஸ்டண்ட் பிரபலம் கூறிய உண்மை தகவல்

#Vijay
#Kanal Kannan

அஜித் அவருக்கு உடம்பில் இல்லாத பிரச்சனையே இல்லை. ஆனாலும் படம் என்று வந்துவிட்டால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் ரிஸ்க்கான காட்சியிலும் நடிப்பார், அப்படி உதாரணமாக நிறைய பட காட்சிகளை கூறலாம்.இப்போது விஜய்யும் தன்னுடைய முதுகுதண்டு பிரச்சனையிலும் நடித்துள்ள ரிஸ்கான காட்சி பற்றி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஒரு பேட்டியில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்யிடம் செம ஆக்ஷன் காட்சிகள் போட்டுவிடலாம் என்று கூறினேன், அதற்கு அவர் குனிவது, நிமிர்வது போன்ற காட்சிகள் எல்லாம் வேண்டாம் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.ஆனால் நான் போட்ட ஸ்டண்ட் விஷயங்களை பார்த்த அவர் தன்னை மறந்த அந்த ரிஸ்க்கான காட்சியில் நடித்தார். 1998ல் தான் அவருக்கு முதுகுதண்டில் ஒரு பிரச்சனை இருந்தது, ஆனால் அந்த விஷயம் 2011ம் ஆண்டு தான் வெளியானது.