முருகதாஸ் என் காலை தொட்டு கும்பிட்டார், வருணை பார்த்ததே இல்லை: மீண்டும் சர்கார் சர்ச்சை பற்றி பேசிய பாக்யராஜ்

#Sarkar

சர்கார் கதை சர்ச்சையை தொடர்ந்து நடிகர் பாக்யராஜ் தற்போது எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த சர்ச்சை பற்றி அவர் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் “வருண் ஏன் கோர்ட்டுக்கு வெளியில் வந்து விஜய்யின் அப்பா எஸ்ஏசிக்கு நன்றி கூறினார் என தெரியவில்லை. நான் அவருக்கு சொல்லிக்கொடுத்தது வேறு, ஆனால் வருண் மீடியா முன்பு வேறு எதோ பேசிவிட்டார்” என கூறியுள்ளார்.மேலும் சர்கார் பற்றி புகார் அளிக்க வரும்முன் வருணை பார்த்ததே இல்லை என அவர் தெரிவித்துள்ளார். வருண் பாக்யராஜுடன் பணியாற்றியவர் என முருகதாஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.அதுமட்டுமின்றி முருகதாஸ் தன்னை எப்போது நேரில் பார்த்தாலும் காலில் விழுந்து வணக்கும் அளவுக்கு தன் மீது மரியாதை கொண்டவர் என பாக்யராஜ் பேசியுள்ளார்.