மூடப்படும் உலகின் முதல் நிர்வாண ஹோட்டல்…! காரணம் என்ன?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் முதன் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிர்வாண ஹோட்டல் அடுத்த மாதம் முதல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதல் நகரம் எனப்படும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 2017-ம் ஆண்டு நிர்வாண ஹோட்டல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் பரபரப்பு செய்தியான இந்த ஹோட்டலில் சர்வர் முதல் கல்லாவில் உட்காந்திருப்பவர் வரை அனைவரும் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பதே விதி.வித்தியாச யோசனையுடன் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலில், முதலில் கூட்டம் குவியத்தொடங்கியது. ‘என்ன?’ ஆர்வத்துக்காக அவர்கள் அங்கு குவிந்தனர் என்பதும் விளங்கவில்லை. நிர்வாணமாக மற்றவர்கள் முன் இருப்பது த்ரில்லிங் அனுபவமாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் தெரிவித்தனர்.

நிர்வாண உணவகம் (Photo: AFP)

இந்நிலையில், அடுத்த மாதத்துடன் இந்த பிரசித்தி பெற்ற உணவகம் மூடப்பட இருக்கிறது. ஆள் வருவது இல்லை என்பதே அதற்கான பிரதான காரணம் என்கின்றனார் ஹோட்டல் நிர்வாகிகள்.

முதலில் நிர்வாணமாக சாப்பிட ஆர்வம் காட்டியவர்கள் தற்போது அதில் பெரிதாக எந்த விஷயமும் இல்லை என்று தற்போது தெரிவிக்கின்றனர் என்று நிர்வாகி கூறுகிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜின் ஹாட் போட்டோஸ் Loading… Also See..