மேகதாது விவகாரம் : இன்று கூடுகிறது சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்

மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த அணைக்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்துள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று மாலை 4 மணிக்கு கூடும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். இந்த சிறப்புக் கூட்டத்தில், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அறிவிப்பு வெளியான 5 நாட்களில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், வேறு எந்த அரசும் இதை விட சிறப்பாக செயலாற்றிவிட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு கூட்டம் கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.Loading… இதனிடையே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணையத்திற்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Also see… இயக்குனர் சங்கரின் திரைப்படங்களை வெற்றியடைய செய்த அந்த காட்சிகள்!