மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.பத்ம விபூஷண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீஜன் பாய்,  மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் மனிபாய், பல்வான்ட் மொரேஹ்வர்,  வெளிநாட்டினர் இஸ்மாயில் ஒமர் குல்லா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்

மலையாள நடிகர் மோகன்லால்,  கேரளாவை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

பத்ம ஸ்ரீ 

கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், நடன இயக்குனர் பிரபுதேவா, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94  பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Also Watch