யுவனின் ஒரு டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா? தல ரசிகர்கள் வேற லெவல் மாஸ்

#Yuvan Shankar Raja

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர். இவர் இசையில் இந்த வருடம் இரும்புத்திரை, பியார் ப்ரேமா காதல் ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது.இதை தொடர்ந்து இவர் தற்போது அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இதை அதிகாரப்பூர்வமாக நேற்று டுவிட்டரில் அவர் சொல்ல, அந்த டுவிட்டை தற்போது வரை 18 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 50 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர், சமீபத்தில் வேறு எந்த இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பு ஒரு டுவிட்டிற்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.தல ரசிகர்கள் யுவன் மீது கொண்ட அன்பால் செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.Happy to be associated on this one after so many years 🙂 #Thala59 💥💥💥💥💥💥💥 😎😎— Yuvanshankar raja (@thisisysr) December 14, 2018