யோவ்.. நீ தட்டிவுட்ட செல்போன் வெல 19 ஆயிரம் ரூவாய்யா.. புலம்பும் இளைஞன்!

இரு தினங்களுக்கு முன் மதுரையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார். அப்போது, இளைஞர் ஒருவர் ஓர் ஓரமாக நின்று செல்போனை மட்டுமே பார்த்தபடி, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், படக்கென அந்த இளைஞரின் செல்போனை ஓங்கி தட்டி விட்டார். அந்த வேகத்தில் செல்போன் அந்த இளைஞரின் கையில் இருந்து படு வேகமாக கீழே விழுந்து உடைந்தது. இதனால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த இளைஞர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்.பின்னர் அந்த செல்போனை எடுத்துப் பார்த்த போது அது படுகேவலமாக உடைந்திருந்தது. இது குறித்து பதிவு செய்த அந்த இளைஞர், எங்க அப்பா அதிமுக., கவுன்சிலரா இருந்தவரு. அந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் ஓபிஎஸ் வருவதா இருந்தது! அவருக்காகத்தான் அந்த நிகழ்ச்சிக்கே போனோம். ஆனா அவரு வரல. பிறகு, அமைச்சர் உதயகுமார் அண்னன் வந்தாரு. அவர் முன்னாடி நின்று செல்ஃபி எடுத்தேன். ஆனா அவரு ஒண்ணும் சொல்லல!பிறகு சிவகுமார் வந்தார். ஒரு நடிகராச்சேன்னு செல்பி எடுக்க ஓர் ஓரமா நின்னுதான் செல்பி எடுத்தோம். அவர துன்புறுத்தவோ டிஸ்ட்ரப் செய்யவோ கூட இல்ல… ஆனா அவரு ஆவேசப் பட்டு, செல்போன தட்டி விட்டுட்டாரு… அது, கீழ வுழுந்து உடைஞ்சிடுச்சி! அது என் அண்ணனோட செல்போன் வேற… இப்போ என் அண்ணனுக்கு நான் என்னா பதில் சொல்லப் போறேன்னு தெர்ல… என்று ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார் அந்த இளைஞர்.19 ஆயிரம் ரூவாய்க்கு… ஒரு ஐயம் வெரி சாரி.. போதும்னு முடிவு கட்டியிருப்பாங்களோ என்னவோ?!

Leave a Reply

Your email address will not be published.