ரஜினி, கமல் என யாருக்கும் இல்லை, விஜய்யின் சர்காரை வீழ்த்த தொடர்ந்து வரும் பிரச்சனைகள்!

#Vijay
#Sarkar
#A.R.Murugadoss

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஏனெனில் படத்தின் பர்ஸ்ட்லுக்கில் இருந்து படம் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள இன்று வரை பல படக்குழு தொட்டதெல்லாமே சிக்கலில் தான் சென்று முடிந்துள்ளது. மேலும் இதெல்லாம் தளபதி விஜய் ஒருவருக்கு மட்டும் தான் என்ற பேச்சு சில வருடங்களாகவே சுற்றி வருகிறது.இப்போது இந்த பேச்செல்லாம் உண்மை தான் என்பது போல சர்கார் படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணங்களில் டிக்கெட்டை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.இது எல்லாம் படங்களுக்கும் நடப்பது தான் என்றாலும், தனிப்படையெல்லாம் இதற்காக தனியாக அமைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் படங்களுக்கே நடக்காத ஒன்று.அரசின் இந்த முடிவு சர்கார் படத்திற்கு ரசிகர்கள் வருவதை தடுப்பதற்காகவே என்று தளபதி ரசிகர்கள் குமுறி கொண்டு வருகின்றனர்.