ராஜபக்சே அணியில் இணைந்த தமிழ் எம்.பி.க்கு அமைச்சர் பதவி

இலங்கை பிரதமர் ராஜபக்சே அணியில் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே-வை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ச-வை அதிபர் சிறிசேனா நியமித்ததை அடுத்து அங்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று ஆலோசனை நடத்தினார். இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா

இதில், ரணில் விக்ரமசிங்கே-வின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துக் கொண்டனர். அப்போது ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகரிடம் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜெயசூர்யா, வரும் 7-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கே

இதனால் வரும் 7-ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இலங்கை பிரதமர் ராஜபக்சே அணியில் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரன், ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. நவீனி ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Also see…

Loading…