ரூ. 70க்கு விற்கப்படும் பெட்ரோல் ஜி.எஸ்.டி.க்குள் வருமா?

நாடு முழுவதும் அனைத்து பொருளுக்கும் ஒரே விதமான வாி விதிப்பு என்ற பெயாில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசுக்கு முக்கிய வருவாய் ஈட்டி தரக்கூடிய பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி.யன் கீழ் கொண்டுவரப்படவில்லை.

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவரப்பட்டால் அதன் விலை பன்மடங்கு குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொவித்திருந்தாா். அவரது அறிவிப்பைத் தொடா்ந்து நிதியமைச்சா் அருண் ஜெட்லிக்கு பல்வேறு தரப்பினரும் இது தொடா்பாக கேள்வி எழுப்பி வருகின்றனா்.

2014-ம் ஆண்டுப் பெட்ரோல் விலை 70 ரூபாயாக உயர்ந்த போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 98 டாலராக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னா் பேரல் 50 டாலராகக் குறைந்தது. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த மாற்றம் இல்லை. தற்போது பெட்ரோல் பேரல் ஒன்று 70 டாலராக உள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 74.02 ரூபாயாக உள்ளது, இதுவே டெல்லியில் 71.27 ரூபாய் என இருக்கின்றது. பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.

மத்திய அரசு பெட்ரோல் மீது கலால் வரியை வசூலிக்கிறது. 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மத்திய அரசு 54 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ளது. இதுவே சராசிரியாக வாட் வரியில் 47 சதவீதமாக உள்ளது. மேலும் டீலர்களின் கமிஷனும் 73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

டீசலை பொருத்தளவில் 154 சதவீதம் வரை கலால் வரி உயர்வைச் சந்தித்துள்ளது. வாட் 48 சதவீதமும், டீலர்கள் கமிஷன் 73 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017 ஆண்டு முதல் டீசல் மீதான கலால் வரி 12 முறை உயர்ந்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு போட்டி போட்டுக்கொண்டு வரியை உயர்த்தியதால் சா்வதேச சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தும் 2014 விலையிலேயே இந்தியாவில் விற்கப்படுகின்றது.

Comments are closed.