வடசென்னையை தொடர்ந்து தனுஷின் மாரி-2 படத்தின் தெறிக்கவிடும் ஃபர்ஸ்ட்லுக் இதோ!

#Dhanush
#Balaji Mohan
#Yuvan Shankar Raja
#Maari

தனுஷின் மிரட்டலான நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியிருந்த இப்படம் வடசென்னையின் மொத்த கதையையும் வெறும் 164 நிமிடங்களில் சொல்லியிருந்தது.இப்படத்திற்கு அடுத்ததாக தனுஷின் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என வரிசையாக படங்கள் வர உள்ளன.இந்நிலையில் தான் மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போன்றே பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.The naughtiest don is back. #Maari2FirstLook#Maari2 #tharalocal #senjuruven pic.twitter.com/i4NdjhiX54— Dhanush (@dhanushkraja) November 2, 2018