வரலக்ஷ்மியுடன் தான் திருமணமா? விஷால் வெளிப்படையாக கூறிய பதில்

#Vishal

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் இதுபற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை.இந்நிலையில் சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் திருமணம் பற்றி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “வரலட்சுமி எனது நண்பர். மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்து தெளிவுபடுத்துவேன்” என கூறியுள்ளார்.